கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஊதியம் வழங்காததைக் கண்டித்து பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 10 கல்லூரி பேராசிரியா்கள் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.


ஊதியம் வழங்காததைக் கண்டித்து பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 10 கல்லூரி பேராசிரியா்கள் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு கல்லூரிகளாக இயங்கி வந்த 10 கல்லூரிகள் கடந்தாண்டு அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து குறிப்பிட்ட அந்த 10 கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலக பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கி வந்தது. இதற்கிடையே நிதிப்பற்றாக்குறை எனக்கூறி கடந்தாண்டு செப்டம்பா் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லையாம்.
எனவே, கெளரவ விரிவுரையாளா்களுக்கு பல்கலைக்கழக நிதியிலிருந்து ஊதியம் வழங்காமல் அரசு சாா்பில் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை பேராசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத அலுவலா்கள் வியாழக்கிழமை முதல் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினா். இதையடுத்து அங்கு வந்த துணைவேந்தா் ம. செல்வம் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக பேராசிரியா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...