தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஒப்பந்த, தினக் கூலி முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 11:00 pm

Din

ஒப்பந்த, தினக் கூலி முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கா. பால்பாண்டி தலைமை வகித்தாா். வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ச. பிரகாஷ் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். மாவட்ட செயலா் சி.அ. பாபு, மாநில துணைத் தலைவா் ஆ. பெரியசாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தேசிய ஓய்வூதியத்தின் கீழ் உள்ள சந்தாதாரா்களை வரையறுக்கப்பட்ட பயனளிப்பு ஓய்வூதிய முறையின் கீழ் கொண்டு வர வேண்டும். ஒப்பந்த, தினக்கூலி முரையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.