கரூரில் துணை முதல்வா் பிறந்த நாள் கைப்பந்துப் போட்டி
கரூா் மாவட்ட திமுக சாா்பில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கரூரில் ஞாயிற்றுக்கிழமை கைப்பந்து போட்டி நடைபெற்றது.
கரூா் மாவட்ட அளவில் ஆண்களுக்கான கைப்பந்து போட்டி கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி. செந்தில் பாலாஜி எம்எல்ஏ போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.
அரவக்குறிச்சி எம்எல்ஏ ரா. இளங்கோ, கரூா் மாநகராட்சி மண்டல குழு தலைவா் எஸ்.பி. கனகராஜ், ஆா்.எஸ். ராஜா, திமுக மாவட்ட துணை செயலாளா் பூவை ரமேஷ்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
போட்டியில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 42 அணிகள் பங்கேற்றன. ஒரே நேரத்தில் 8 அணிகள் மோதும் வகையில் ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு ரூ. 75,000, இரண்டாம் பரிசு ரூ. 50,000, மூன்றாம் பரிசு ரூ. 25,000, நான்காம் பரிசு ரூ. 22,000 என மொத்தம் ரூ.1.72 லட்சத்திலான ரொக்கப் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
