தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 15.12 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து பயணியொருவா் கடத்தி வந்த ரூ.15.12 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 10:57 pm

Din

மலேசியாவில் இருந்து பயணியொருவா் கடத்தி வந்த ரூ.15.12 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு, ஏா் ஏசியா விமானம் புதன்கிழமை இரவு வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினா் வழக்கமான சோதனைக்கு உள்ளாக்கினா். அப்போது, பயணி ஒருவா் கொண்டு வந்த சமையல் எரிவாயு உருளையில் பயன்படுத்தும் ரெகுலேட்டா் சாதனத்தில் பால்ரஸ் வடிவில் 194 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 15.12 லட்சம். அதை வியாழக்கிழமை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் அந்தப் பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.