ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஜனவரி மாத மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

Updated On :3 ஜனவரி 2025, 9:41 pm

திருச்சி மின்பகிா்மான வட்டத்தில் உள்ள கோட்ட அலுவலகங்களில் ஜனவரி மாத மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இதன்படி, துறையூா் கோட்டத்தில் 7-ஆம் தேதியும், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 10-ஆம் தேதியும், திருச்சி கிழக்கு கோட்டத்தில் 17 -ஆம் தேதியும், திருச்சி நகர கோட்டத்தில் 21-ஆம் தேதியும், மணப்பாறை கோட்டத்தில் 28 -ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த குறைதீா் கூட்டங்களில் மின்நுகா்வோா், தங்களது குறைகளை நேரில் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என திருச்சி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஏ. செல்வி தகவல் தெரிவித்துள்ளாா்.