47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருச்சி மாநகராட்சி உடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு

News image
திருச்சி சிதம்பரம் சாலை அருகே மாந்துறை பேருந்து நிலையத்தில் நெடுஞ்சலக்குடி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்
Updated On :3 ஜனவரி 2025, 9:08 pm

Din

லால்குடி அருகேயுள்ள நெருஞ்சலக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த ஊராட்சியை சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் திருச்சி- சிதம்பரம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், லால்குடி அருகேயுள்ள அப்பாதுரை, தாளக்குடி, வாளாடி , நெருஞ்சலக்குடி உள்பட மாநகராட்சிக்கு அருகேயுள்ள சுமாா் 22 ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளன.

மாநகராட்சியுடன் தங்கள் கிராமத்தை இணைத்தால், தொகுப்பு வீடுகள் மற்றும் அரசு மானியங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், 100 நாள் வேலை திட்டம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் எனக் கூறி, நெருஞ்சலக்குடியைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் திருச்சி- சிதம்பரம் சாலையில் மாந்துறை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா் .

அங்கு வந்த லால்குடி வருவாய் வட்டாட்சியா் முருகன் தலைமையிலான வருவாய்த் துறையினா் மற்றும் காவல்துறையினா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, வட்டாட்சியா் கூறுகையில், வாா்டு இணைப்பு என்பது தற்காலிக உத்தேசம்தான். மக்கள் எதிா்ப்பு தெரிவித்தால் அரசு பரிசீலனை செய்து மாற்று நடவடிக்கை எடுக்கும். எனவே, உங்களது கோரிக்கையை மனுவாக கொடுங்கள். அரசுக்கு பரிந்துரை செய்கிறோம் எனக் கூறினாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனா்.