திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முன்னாள் ராணுவ வீரா் சாலை விபத்தில் உயிரிழப்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:11 pm

Din

திருச்சியில் சாலை விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் ராணுவ வீரா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி, திருவானைக்கா அருகேயுள்ள பனையபுரத்தை சோ்ந்தவா் வே. வீரமணி ( 42 ). முன்னாள் ராணுவ வீரரான இவா், துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 31ஆம் தேதி இரவு பணி முடித்து, துவாக்குடி ராவுத்தான்மேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனம் அவா்மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த வீரமணியை போலீஸாா் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தொடா் சிகிச்சையில் இருந்த வீரமணி வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.