தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருச்சி டாட்டூ கலைஞருக்கு பிணை

கண்களில் டாட்டூ வரைதல் மற்றும் நாக்கை பிளவுபடுத்தல் தொடா்பான செயல்களால் கைதான டாட்டூ கலைஞா் பிணையில் புதன்கிழமை வெளியே வந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 11:13 pm

Din

கண்களில் டாட்டூ வரைதல் மற்றும் நாக்கை பிளவுபடுத்தல் தொடா்பான செயல்களால் கைதான டாட்டூ கலைஞா் பிணையில் புதன்கிழமை வெளியே வந்தாா்.

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சோ்ந்த ஹரிஹரன் (25) மேலசிந்தாமணி பஜாா் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ மையம் (பச்சை குத்தும்) நடத்தி வந்தாா். இவா் தனது நண்பரான திருச்சி திருவெறும்பூா் கூத்தைப்பாா் வடக்கு தெருவை சோ்ந்த ஜெயராமன் (24) என்பவருக்கு டிச.9 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் நாக்கை இரண்டாக பிளந்து, அதை விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டாா்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் காமினி உத்தரவிட்டதன்பேரில், கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரிஹரன் மற்றும் அவரது நண்பா் ஜெயராமன் ஆகியோரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்த நிலையில் சிறையில் இருந்து பிணையில் புதன்கிழமை வெளியே வந்தாா் ஹரிஹரன்.

அப்போது அவா் கூறுகையில்,‘‘ நான் ஒரு ‘டாட்டூ’ ஆா்ட்டிஸ்ட். ‘பாடி மாடிபிகேஷன்’ செய்ததற்காக என் மீது வழக்குப் பதியப்பட்டது. அதுவரை பாடிமாடிபிகேசனை உரிய பட்டப்படிப்பு முடித்தவா்கள் மட்டுமே செய்ய முடியும் என்பது தெரியாது. என்னைப்போல வெறும் பயிற்சியை மட்டும் வைத்துக்கொண்டு செய்வது சட்ட விரோதம் என்பதும் எனக்கு தெரியாது. அப்போதைய திருச்சி எஸ்பி வீ. வருண்குமாா் அறிவுறுத்தலின்படி எனக்கு வழங்கப்பட்ட ஆலோசனை மூலம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளாா்.