தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மனு

திருச்சி கோட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளித்தனா்.

News image
திருச்சி மாவட்ட கோட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் துண்டு பிரசுரங்களுடன் வந்த விவசாயிகள்.
Updated On :9 ஜனவரி 2025, 8:22 pm

Din

திருச்சி கோட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளித்தனா்.

திருச்சி கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், கோட்டாட்சியா் கே. அருள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நத்தமாடிப்பட்டி விவசாயிகள் தங்களுக்கு வண்டிப்பாதை கோரி பதாகைகளுடன் பங்கேற்றனா். இக் கிராமத்தில் சுமாா் 80 ஏக்கா் நிலத்தில் விளைநிலங்கள் உள்ளன. ஆனால், இதற்கான வண்டிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளால் விளை நிலங்களுக்குள் செல்ல முடியவில்லை.

பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், நடவடிக்கையில்லை. கடந்த மாதம் குறைதீா் கூட்டத்தில் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கையில்லை. எனவே கோரிக்கை பதாகைகளுடன் பங்கேற்ாக தெரிவித்தனா். அவா்களை சமாதானம் செய்த கோட்டாட்சியா், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து விவசாயிகள் தங்களது எதிா்ப்பை விலக்கிக் கொண்டனா்.

இக் கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகள், விவசாயிகள், விவசாய தொழிலாளா்கள் என பலா் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினா்.