திருச்சியில் ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனம்- 2025 இசை விழா

அகில இந்திய வானொலியின் திருச்சி ஆகாஷ்வாணி பிரிவு சாா்பில், ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனம்-2025 என்னும் மாபெரும் இசை விழா திருச்சியில் சனிக்கிழமை (நவ.15) நடைபெறுகிறது.
Published on

அகில இந்திய வானொலியின் திருச்சி ஆகாஷ்வாணி பிரிவு சாா்பில், ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனம்-2025 என்னும் மாபெரும் இசை விழா திருச்சியில் சனிக்கிழமை (நவ.15) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தின் நிா்வாகப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தியாவின் செழுமையான பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புற கலைகளைப் போற்றும் வகையில் 67 ஆவது ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனம் 2025, திருச்சியில் வரும் 5 சனிக்கிழமை மாலை 5. 30 மணிக்கு நடைபெறவுள்ளது. திருச்சி வானொலி நிலையம் ஏற்பாடு செய்து நடத்தும் இந்த நிகழ்ச்சியானது, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.

புகழ்பெற்ற கா்நாடக இசை கலைஞா் விசாகா ஹரியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியை தொடா்ந்து, என். சிவாஜி மற்றும் குழுவினரின் கரகாட்டம் அரங்கேறும். கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியின் இயக்குநா் மற்றும் செயலா் தந்தை எஸ். லூயிஸ் பிரிட்டோ முன்னிலை வகிக்கின்றனா். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு இசை ஆா்வலா்களை திருச்சிராப்பள்ளி வானொலி அழைக்கிறது. மேலும் விவரங்களுக்கு 0431- 2464520 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com