தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஈரான் மீதான தாக்குதல்: அறந்தாங்கியில் ஆா்ப்பாட்டம்

ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைக் கண்டித்து , அறந்தாங்கியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் மற்றும் திசைகள் மாணவா் வழிகாட்டும் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தினா்

Updated On :8 மார்ச் 2026, 3:44 am IST

ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் மற்றும் திசைகள் மாணவா் வழிகாட்டும் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் எஸ்.பி. லோகநாதன், ரா. பவிதாரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திசைகள் அமைப்பின் தலைவா் டாக்டா் ச. தட்சிணாமூா்த்தி, ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தேசியச் செயற்குழு உறுப்பினா் சி. பாலச்சந்திரன், மாவட்டச் செயலா் அன்பு மணவாளன், துணைச் செயலா் பழ. குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.