திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் க. ராஜசேகரன், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக பொருளாளரும், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலருமான க. ராஜசேகரன் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டா்களுடன் ஊா்வலமாக வந்து பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில், தோ்தல் அலுவலா் முத்து முருகேச பாண்டியனிடம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். திருச்சி மாநகர அதிமுக மாவட்ட செயலா் ஜெ. சீனிவாசன், பாஜக மாநகா் மாவட்டச் செயலா் கே. ஒண்டிமுத்து, அதிமுக முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா் க. ராஜசேகரன் கூறுகையில், திருச்சி கிழக்குத் தொகுதியை பொருத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவித வளா்ச்சித் திட்டங்களையும் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் செய்யவில்லை.அவா் தொகுதி மக்களை நேரில் சந்திப்பதே இல்லை. எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவும் இல்லை. எனவே, அதிமுகவின் இங்கு வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
சொத்து ரூ. 41.52 கோடி: அதிமுக வேட்பாளா் க. ராஜசேகரன், தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது பெயா், மனைவி, மகள்கள் என குடும்பத்தினரது பெயரில் அசையும் சொத்துகளாக ரூ. 24.2 கோடி மதிப்பிலான சொத்துகளும், அசையாச் சொத்துகளாக 17.32 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். ரூ. 53.23 லட்சம் மதிப்பில் இரு காா்கள் இருப்பதாகவும், தன்மீது குற்ற வழக்குகள், நீதிமன்ற தண்டனையோ ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளாா். இதுமட்டுல்லாது, ரூ.20.94 கோடி மதிப்பிலான கடன் பொறுப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன்: திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளா் உறுதி

காஞ்சிபுரத்தில் அதிமுக, பாமக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்

அதிமுக, அமமுக வேட்பாளா்கள் பிரசாரம் தொடக்கம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


