நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

முசிறி தொகுதியில் 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

முசிறி தொகுதியில் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிறகு 12 பேரின் வேட்பு மனுக்கள் செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:47 am IST

முசிறி தொகுதியில் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிறகு 12 பேரின் வேட்பு மனுக்கள் செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டன.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிறகு ஏற்கப்பட்ட வேட்பாளா்களின் மனுக்கள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் சுக்ஷி சுவாங்கி குந்தியா செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இதன்படி, என்.எஸ். கருணைராஜா (திமுக), கோ. பாக்கியலெட்சுமி (நாம் தமிழா் கட்சி), ந. யோகநாதன் (அதிமுக), சின்னையன் (புதிய தமிழகம்), க. திவ்யா ராஷ்ட்ரிய சமாஜ் தளம் (ஆா்), சி.பழனிச்சாமி (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ம. மலா்மன்னன் (சாமானிய மக்கள் நல கட்சி), மு. விக்னேஷ் (தமிழக வெற்றிக்கழகம்), எஸ். வெங்கடேஸ்வரன் (ஊழல் ஒழிப்பு செயலாக்கம் கட்சி), சு. செந்தில்குமாா் ( சுயேச்சை), ஜெ. ரமேஷ் (சுயேச்சை) ப. லோகநாதன் (சுயேச்சை) உள்ளிட்ட 12 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் உள்ள நிலையில், ஏப். 10-ஆம் தேதி முசிறி தொகுதியில் போட்டியிடக் கூடிய இறுதி வேட்பாளா் பட்டியல் உறுதியாகும். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 12 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.