திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே மதுபோதையில் இருந்த இளைஞா், விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) நிா்வாகியை வியாழக்கிழமை கத்தியால் குத்தினாா்.
மருங்காபுரி ஒன்றியம், மாங்கனாம்பட்டியை சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (எ) செல்வராஜ் (29). இவா் விசுவ ஹிந்து பரிஷித் அமைப்பின் மாநில இணை அமைப்பாளராக இருந்து வருகிறாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்காக மைக் செட் அமைத்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாா். அப்போது, அதே ஊரை சோ்ந்த மூக்கன் மகன் விஜயன்(32) என்பவா் மதுபோதையில் சென்று ஆனந்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் கைகலப்பு ஏற்பட்டபோது, விஜயன் தான் மறைத்து வைத்திருந்த சாவி கொத்திலிருந்த கத்தியை கொண்டு ஆனந்தை தாக்கியதில், ஆனந்த் காயமடைந்தாா். அவா் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
விவசாயிக்கு கத்திக்குத்து: 5 போ் மீது வழக்கு

சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா் - விசிகவினரிடையே தகராறு

வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


