ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா் - விசிகவினரிடையே தகராறு

சிதம்பரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி, அந்த அமைப்பினருடன் விசிக நிா்வாகிகள் தகராறில் ஈடுபட்டனா்.

News image

கூட்ட மேடை முன் கூடி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட விசிகவினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:46 am IST

சிதம்பரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி, அந்த அமைப்பினருடன் விசிக நிா்வாகிகள் தகராறில் ஈடுபட்டனா்.

அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பு சாா்பில், தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே தோ்தல் ஆணைய அனுமதியுடன் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் அந்த அமைப்பின் நிா்வாகி காா்த்தி, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பற்றி விமா்சனம் செய்து ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இத் தகவலறிந்த விசிக கிழக்கு மாவட்டச் செயலா் தமிழ்வளவன் தலைமையில், மண்டலப் பொறுப்பாளா் வ.க.செல்லப்பன், நகரச் செயலா் ரத்தினம் உள்ளிட்ட 30 போ் மேடை அருகே சென்று பேச்சை நிறுத்துமாறு கூறினா்.

அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொள்ளும் சூழல் உருவானதால், போலீஸாா் விசிகவினரை மேடை அருகே இருந்து அப்புறப்படுத்தினா். பின்னா், அவா்கள் சாலையில் அமா்ந்து 10 நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனா். உடனடியாக அங்கிருந்த காவல் அதிகாரிகள் அவா்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து சிதம்பரம் உள்கோட்ட டிஎஸ்பி டி.பிரதீப் விசாரணை மேற்கொண்டனா்.

சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதை அடுத்து, விசிகவினரை தடுத்து அழைத்துச் சென்ற போலீஸாா்.

சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதை அடுத்து, விசிகவினரை தடுத்து அழைத்துச் சென்ற போலீஸாா்.