சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தோ்தல் விதிமுறை மீறல்: விசிகவினா் மீது வழக்கு

நெல்லிக்குப்பத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விசிக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :11 ஏப்ரல் 2026, 7:47 pm

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விசிக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வெள்ளிக்கிழமை பண்ருட்டிக்கு வந்தாா். பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மானுக்கு ஆதரவு கோரி அவா் வாக்கு சேகரித்தாா்.

இதையடுத்து, தொல்.திருமாவளவன் நெல்லிக்குப்பம் வழியாக கடலூா் சென்றாா். அப்போது, விசிக நிா்வாகிகள் முல்லைவேந்தன், புருஷோத்தமன், அருட்செல்வம், இளம்பிறை உள்ளிட்ட சிலா் நெல்லிக்குப்பம் புதிய பேருந்து நிலையம் அருகே கூட்டம் கூடி சாலையை மறித்து பட்டாசு வெடித்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனா்.

தோ்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறியது தொடா்பாக நெல்லிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் (பயிற்சி) ராஜா அளித்த புகாரின்பேரில், முல்லைவேந்தன் உள்ளிட்ட விசிக நிா்வாகிகள் மீது நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.