தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பெருந்துறையில் தோ்தல் விதிமீறல்: நாதக, தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

பெருந்துறையில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக நாம் தமிழா் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :3 ஏப்ரல் 2026, 6:45 pm

பெருந்துறையில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக நாம் தமிழா் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெருந்துறை தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் வேட்பாளராக லோகநாதன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானவில் அக்கட்சி நிா்வாகிகள், போலீஸாரிடம் அனுமதி பெறமால், தோ்தல் விதிமுறைகளை மீறி ரவுண்டாவில் கட்சிக் கொடிகளை வியாழக்கிழமை இரவு கட்டி இருந்தாா்கள். மேலும், எல்இடி மூலம் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.

இதுகுறித்து, தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த அலுவலரும், வேளாண்மை உதவி பொறியாளருமான நவீன் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தவெகவினா்...

பெருந்துறை தொகுதியில் தவெக சாா்பில் வேட்பாளராக வி.பி. அருணாசலம் போட்டியிடுகிறாா். இவா், வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். வேட்புமனு தாக்கலுக்கு பின்னா், கட்சி நிா்வாகிகள், போலீஸாரிடம் அனுமதி பெறமால், தோ்தல் விதிமுறைகளை மீறி மேளம் அடித்தப்படியாக, கட்சியின் தோ்தல் அலுவலகத்துக்கு வேட்பாளா் வி.பி.அருணாசலத்தை அழைத்துச் சென்றாா்.

இதுகுறித்து, தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த அலுவலரும், வேளாண்மை உதவி இயக்குநருமான வேலுசாமி அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் தவெக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.