தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பேருந்து நடத்துநரிடம் ரூ. 6.15 லட்சம் திருட்டு: இளைஞா்கள் 2 போ் கைது

திருச்சியில் அரசுப் பேருந்து நடத்துநரிடம் ரூ. 6.15 லட்சம் திருடிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 8:09 pm

திருச்சியில் அரசுப் பேருந்து நடத்துநரிடம் ரூ. 6.15 லட்சம் திருடிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் தெய்வமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பெ.சுப்பிரமணியன் (56), அரசுப் பேருந்து நடத்துநா். இவா், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கியில் ரூ. 4.15 லட்சம் கடன் பெற்றாா். அந்தப் பணம் மற்றும் மற்றொரு வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ. 6.15 லட்சத்தை கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி வங்கிகளிலிருந்து பெற்று கொண்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் ரூ. 6.15 லட்சம் இருந்த கைப்பையையும் வைத்துவிட்டு, நண்பரை பாா்க்கச் சென்றுள்ளாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், அந்தப் பணத்தை திருடியது திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியைச் சோ்ந்த எஸ்.சிவா (29), பி. ராஜா (41) ஆகியோா்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவா, ராஜா ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1.15 லட்சம் பணம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.