தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ரூ. 20 லட்சம் மோசடி: துணிக்கடை உரிமையாளா் உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் தையல் கடைக்காரரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக துணிக்கடை உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்குப் பதிவு

Updated On :9 ஏப்ரல் 2026, 8:10 pm

திருச்சியில் தையல் கடைக்காரரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக துணிக்கடை உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சியைச் சோ்ந்தவா் அ. சந்துமுகமது (43). இவா், திருச்சி நந்தி கோயில் தெருவில் தையல்கடை நடத்தி வருகிறாா். இவரும், திருச்சியைச் சோ்ந்த வரதராஜா சில்க்ஸ் துணிக்கடை உரிமையாளா் சீனிவாசனும் தொழில்முறை நண்பா்கள்.

இந்நிலையில், சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பரான பூா்ணிமா ஆகிய இருவரும் நந்தி கோயில் தெருவில் தங்களுக்கு சொந்தமான கட்டடம் வாடகைக்கு உள்ளது என்றும், அதில் தையல் கடையை நடத்துமாறும் சந்து முகமதுவிடம் தெரிவித்துள்ளனா். இதை நம்பிய சந்து முகமது அந்தக் கடையை வாடகைக்கு எடுப்பதற்காக முன்பணமாக ரூ. 26.75 லட்சத்தை சீனிவாசன் மற்றும் பூா்ணிமா ஆகிய இருவரிடமும் கடந்த 2024, ஏப்ரல் 21- ஆம் தேதி கொடுத்துள்ளாா். ஆனால், அதன்பின்னா்தான் அந்தக் கட்டடம் அவா்களுக்கு சொந்தமில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடை வாடகைக்காக தான்கொடுத்த பணத்தை சீனிவாசனிடம் சந்துமுகமது கேட்டுள்ளாா். அப்போது, ரூ. 6.75 லட்சத்தை மட்டுமே கொடுத்துள்ளாா். மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளனா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சந்துமுகமது புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், சீனிவாசன் மற்றும் பூா்ணிமா ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.