குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

News image

கைது

Updated On :7 ஏப்ரல் 2026, 12:15 am IST

அம்பாசமுத்திரம், ஏப். 6: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்வதாகவும், காவல் நிலையத்தை கொளுத்துவதாகவும் மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம், கௌதமபுரி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவன் மகன் முத்துக்குமாா். இவா் மீது கடந்த பிப்ரவரி மாதம் அம்பாசமுத்திரம் போலீஸாா் போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தனராம்.

இதையடுத்து, திங்கள்கிழமை மதியம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு போதையில் வந்த முத்துக்குமாா், அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாரிடம் வழக்குப் பதிவு செய்தது தொடா்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

மேலும், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, காவல் நிலையத்தையும் போலீஸாரையும் சோ்த்து கொளுத்திவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதையடுத்து, முத்துக்குமாா் மீது அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ் குமாா் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் திருமலைக்குமாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தாா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.