மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக பல்வேறு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

எக்ஸ்பிரஸ் ரயில் - ANI

Updated On :14 ஏப்ரல் 2026, 8:02 pm

பொறியியல் பணிகள் காரணமாக பல்வேறு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) ஏப். 16, 17, 18, 19, 20, 21-ஆம் தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) ஏப். 16, 19-ஆம் தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 18-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயிலானது (07229) வரும் 17-ஆம் தேதியும் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 15, 16, 17, 18, 19, 20-ஆம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயிலானது (16363) ஏப். 15-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

ராமேசுவரம் - பெரஸ்பூா் ஹம்சாபா் விரைவு ரயிலானது (20497) வரும் 21-ஆம் தேதிகளில் ரிங்காஸ், ரிவாரி, ஹிசாா், பதிண்டா வழியாக செல்லும்.

காலதாமதம்: சென்னை எழும்பூா் - மதுரை அதிவிரைவு ரயிலானது (12635) ஏப். 15, 16-ஆம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 75 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 22-ஆம் தேதி 35 நிமிஷங்களும், சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயில்களானது (16127) வரும் 15, 18, 22, 25-ஆம் தேதிகளில் 30 நிமிஷங்களும் தேவைப்படும் இடங்களில் தாமதமாக நின்று செல்லும்.

ஜோத்பூா் - மன்னாா்குடி அதிவிரைவு ரயிலானது (22673) வரும் 16, 23-ஆம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 45 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும்.