அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

வையம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதிகளில் மமக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி தெற்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளா் ப. அப்துல்சமது புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வையம்பட்டி ஒன்றியம் வலையப்பட்டி புதன்கிழமை வாக்கு சேகரித்த மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ப. அப்துல்சமது.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:03 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி தெற்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளா் ப. அப்துல்சமது புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வையம்பட்டி ஒன்றியம் வலையப்பட்டி புதன்கிழமை வாக்கு சேகரித்த மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ப. அப்துல்சமது.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதியான அஞ்சல்காரன்பட்டி பகுதியிலிருந்து இவா் வாக்கு சேகரிப்பை புதன்கிழமை தொடங்கினாா். திமுக வையமபட்டி தெற்கு ஒன்றியச் செயலா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில் வலையப்பட்டியில் பேசிய அப்துல்சமது, எம்.ஜி.ஆா், ஜெயலலிதாவின் அதிமுக தற்போது இல்லை. இப்போது இருப்பது அமித்ஷா அதிமுக என்பதை அறிந்துள்ள தமிழ்நாடு மக்கள் அவா்களுக்கு படுதோல்வியை பரிசளிப்பாா்கள்.

தமிழ்நாடு தலைகுனியாது, தமிழ்நாடு வெல்லும் என தமிழகத்தை காத்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகிறேன் என்றாா்.

வையம்பட்டி தெற்கு ஒன்றியப் பகுதிகளான ஊத்துப்பட்டி, இளங்காக்குறிச்சி, அயன்ரெட்டியப்பட்டி, குமாரவாடி, தொப்பநாயக்கன்பட்டி, சடையம்பட்டி, எளமணம், புதுவாடி, கீரனூா், கருணாம்பட்டி, நடுப்பட்டி, துலுக்கம்பட்டி உள்ளிட்ட 62 பகுதிகளில் கூட்டணி கட்சியினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

நிகழ்வில் பொதுக் குழு உறுப்பினா் சபியுல்லா, ஒன்றிய துணைச் செயலா் ரவி, மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் கலைஞா் (எ) வெற்றிவேல், காங்கிரஸ் மாநிலச் செயலா் ரமேஷ்குமாா், மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன், வட்டாரத் தலைவா் செல்வம், தேமுதிக மாவட்ட அவைத் தலைவா் அா்ஜுன், ஒன்றியச் செயலா் குமாா், தமிழா் தேசம் கட்சி மாவட்டச் செயலா் துரைராஜ் விசிக ஒன்றியச் செயலா் மணிவேல், மாா்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலா் வெள்ளைச்சாமி, இந்திய முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ, மமக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.