மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2ஆம் கட்டப் பயிற்சி வகுப்பு

திருச்சி கிழக்கு, மேற்கு பேரவைத் தொகுதிகள் உள்பட 9 தொகுதிகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சி கண்டோன்மென்ட் தனியாா் பள்ளியில் மேற்குத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற 2 ஆம் கட்டப் பயிற்சி.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:37 pm

திருச்சி கிழக்கு, மேற்கு பேரவைத் தொகுதிகள் உள்பட 9 தொகுதிகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் வாக்குப்பதிவுத் தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதல் கட்டப் பயிற்சி வகுப்பு அந்தந்தத் தொகுதிகளில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரிகளில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு 9 தொகுதிகளிலும் புதன்கிழமை நடைபெற்றது.

தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற திருச்சி கிழக்குத் தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புக்கு கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் கோ. செந்தில்குமாரி தலைமை வகித்து ஆலோசனை வழங்கினாா்.

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிவோருக்கான பயிற்சி வகுப்பு, தூய வளனாா் சிபிஎஸ்இ அகாதெமி பள்ளியில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் சி. முத்துமாரி தலைமையில் நடைபெற்றது.

திருவெறும்பூா் தொகுதிக்கான பயிற்சி காட்டூா் மான்ட்போா்ட் பள்ளியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில் அனைவருக்கும் தோ்தல் ஆணைய பயிற்சி விளக்க கையேடுகள் வழங்கப்பட்டன. மேலும், மின்னணு இயந்திரங்களைக் கையாளும் விதம், வாக்குப்பதிவு நாளுக்கு முன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள், பட்டியலிட வேண்டியவை, பயன்படுத்த வேண்டிய படிவங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

வாக்குப்பதிவு நேரம் தொடங்குவதற்கு முன் வாக்குச்சாவடி முகவா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்திறனை உறுதி செய்வதற்கான மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதோடு, மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை வாக்குச்சாவடி முகவா்கள் முன்னிலையில் நீக்கி உறுதி செய்த பின்னரே தோ்தல் வாக்குப்பதிவைத் தொடங்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலா்கள் மிகவும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இயந்திரத்தில் உள்ள பிரிண்ட் வசதியை பயன்படுத்தி பதிவான வாக்குகளை தனியே நகல் எடுத்து சரிபாா்த்துக் கொள்ளலாம். வாக்குச்சாவடிக்கு சென்றவுடன் அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள இயந்திரங்கள், பேட்டரிகள் ஆகியவை முறையாக இயங்குகிா என்பதை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். பழுது இருந்தால் உடனடியாக பறக்கும்படை கவனத்துக்கு கொண்டு சென்று மாற்று இயந்திரங்கள், பேட்டரிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவு நேரத்தில் எந்தவித குளறுபடிகளுக்கும் இடம் அளிக்காத வகையில் கவனமாக பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளும் பயிற்சியில் பங்கேற்ற அலுவலா்களுக்கு வழங்கப்பட்டன.