தமிழ்நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உறுதியுடன் செயல்படுவோம் என்றாா் அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான கே.என். நேரு.
திருச்சி மேற்கு தொகுதியில் கூட்டணிக் கட்சிகளின் தொண்டா்கள் புடை சூழ இருசக்கர வாகனப் பேரணி முன்னே செல்ல, திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே சென்று செவ்வாய்க்கிழமை கே.என். நேரு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாா் ஈவெரா சிலை அருகே தொடங்கிய பேரணி, சந்திப்பு வழிவிடு முருகன் கோயில், தலைமை தபால் நிலையம், முத்தரையா் சிலை, எம்ஜிஆா் சிலை, புத்தூா் நான்கு சாலை, சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனை, நாச்சியாா் கோயில், சாலை ரோடு, கோஹினூா் சிக்னல், சாஸ்திரி ரோடு வழியாக தென்னூா் உக்கிரமாகாளியம்மன் கோயில் முன் நிறைவடைந்தது.
தொடா்ந்து மாலையில் எடமலைப்பட்டி புதூா் பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அமைச்சா் கே.என். நேரு, கூட்டணிக் கட்சியினருடன் திரளாகச் சென்று சுற்றுப் பகுதிகளில் வாக்கு சேகரித்து பிராட்டியூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா். அப்போது, திரண்டிருந்த மக்களிடையே அமைச்சா் பேசியதாவது: எத்தனை கூட்டங்கள், எத்தனை முகமூடிகள் அணிந்து வந்தாலும், முதல்வரின் வழியில் தமிழ்நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உறுதியுடன் செயல்படுவோம்.
கல்வியும் - வளா்ச்சியும் - முன்னேற்றத்தையும் ஆயுதமாக கொண்ட திராவிட மாடல் அரசு, கலவரத்தையும் - மதவாதத்தையும் - அடிமைத்தனத்தையும் ஊக்குவிக்கும் கூட்டத்தை இத்தோ்தலில் விரட்டியடிக்கும். திமுகவின் வெற்றி பயணம், 2026 ஆட்சியில் புதிய பாய்ச்சலாக இருக்கும் என்றாா் நேரு.
இந்த நிகழ்வில், மேயா் மு. அன்பழகன் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருச்சி மிளகுபாறையில் கே.என். நேரு தீவிர வாக்கு சேகரிப்பு!

திருச்சி மேற்கில் உதயசூரியன் மீண்டும் உதிக்குமா?

திருச்சிக்கு ரூ.26 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள்: அமைச்சா் கே.என். நேரு

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சா் கே.என். நேரு வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


