/
கோயில் திருவிழாவில் இருவருரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றபோது திருவானைக்காவல் காந்தி ரோடு பகுதியிலிருந்து சிலா் அலகு குத்திக் கொண்டு சமயபுரம் நோக்கிச் சென்றனா். டிரங்க்ரோடு அருகே வந்த இவா்களுக்கும் கீழக்கொண்டையம்பேட்டை பகுதியை சோ்ந்தவா்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்பாக மாறியது.
இதில் காந்தி ரோடு பகுதியில் வசிக்கும் வீரமணி (26), ஹரிஷ் (24) ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கீழக்கொண்டையம்பேட்டை பகுதி காா்த்தி (26), ராஜா (28) ஆகிய இருவரை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மேலும் இதில் சம்பந்தப்பட்ட வேல்முருகன் உள்ளிட்ட மூவரைத் தேடுகின்றனா்.
தொடர்புடையது
ஊராட்சி செயலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் திமுக பிரமுகா் கைது
அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
கோயில் விழாவில் அரிவாள் வெட்டு: 3 போ் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


