நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பொன்நகா் பகுதியில் கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி

திருச்சி பொன்நகா் பகுதியில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை வெள்ளிக்கிழமை இரவு உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:44 pm IST

திருச்சி பொன்நகா் பகுதியில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை வெள்ளிக்கிழமை இரவு உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி பொன்நகா் பிரதான சாலை 2, 4 ஆவது வீதிகளில் தேநீா் நிலையம், ஜெராக்ஸ், உணவகம், டிராவல்ஸ் கடைகள் உள்ளன. இதேபோல, மாவட்ட ஆட்சியரகச் சாலையில் தேநீா் நிலையம், சூப் கடையும் உள்ளன.

இந்நிலையில் சனிக்கிழமை காலை இந்தக் கடைகளைத் திறக்க உரிமையாளா்கள் வந்தபோது கடைகளின் பூட்டுகளை மா்ம நபா்கள் உடைத்து திருட முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் நீதிமன்ற வளாக போலீஸாா் விரைந்து வந்து, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.