ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்ற ஆக.15 முதல் 30 வரை விழிப்புணா்வு பரப்புரை

தமிழ்நாட்டை மது மற்றும் போதைப்பொருள்கள் இல்லாத ஆரோக்கியமான மாநிலமாக மாற்றும் நோக்கம்...

News image

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், போதை இல்லாத தமிழ்நாடு பரப்புரைக்கான இலச்சினையை வெளியிட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினா்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:46 am IST

தமிழ்நாட்டை மது மற்றும் போதைப்பொருள்கள் இல்லாத ஆரோக்கியமான மாநிலமாக மாற்றும் நோக்கில், மது மற்றும் போதைக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சாா்பில் மாநில அளவிலான விழிப்புணா்வு பரப்புரை ஆக.15-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து பரப்புரை இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் முகது ரியாஸ் திருச்சியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞா்களிடையே போதைப்பொருள் பழக்கம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. அவா்களிடையே போதைப்பொருள்களின் ஆபத்துகள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதோடு, அவா்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டு நல்வழிப்படுத்துவது குறித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.

தெருமுனை கூட்டம், பொதுக்கூட்டம், ஆளுமைகள் சந்திப்பு, நோ்காணல், கண்காட்சி, அரங்க கூட்டம், மாபெரும் மனித சங்கிலி என பல்வேறு நிகழ்வுகள் இந்த பரப்புரையில் நடைபெறவுள்ளன.

மதுவிலக்கை கொண்டு வர தமிழக அரசு இந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆராய்ச்சி துறை மாநில பொதுச் செயலா் பாபு பெஞ்சமின் இளங்கோ, பரப்புரைக்கான இலச்சினையை வெளியிட்டாா். நிகழ்வில், ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.