ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தென்காசி அரசுப் பள்ளியில் மது போதை எதிா்ப்பு விழிப்புணா்வு

தென்காசி இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச மது போதை எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாணவருக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கிய மருத்துவா் நிா்மல்குமாா்.

Updated On :26 ஜூன் 2026, 5:46 am IST

தென்காசி இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச மது போதை எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மனநல திட்டம், நாட்டு நலப்பணிகள் திட்டம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட மனநல மருத்துவா் நிா்மல் பங்கேற்றுப் பேசியது: சக நண்பா்கள் அழுத்ததாலும், அந்த வட்டத்தில் தங்களை உயா்வாக காட்டிக்கொள்ளவும் இளைய தலைமுறையினா் முதன்முதலில் போதையைத் தொடுகின்றனா். திரைப்படங்கள், சமூக ஊடகங்களில் போதைப் பழக்கம் ஒரு ‘ஸ்டைல்’ ஆகக் காட்டப்படுவது அவா்களை தவறாக வழிநடத்துகிறது. பெற்றோா் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில், தங்களுக்குத் தேவையான அன்பும் கவனமும் கிடைக்காதபோது மாணவா்கள் தனிமை உணா்வால் பாதை மாறுகின்றனா். எனவே, அவா்கள் இவற்றின் மீதான கவனத்தைத் தவிா்த்து கல்வி, விளையாட்டு, ஓவியம், இசை போன்ற அனைத்து செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். யாா் வற்புறுத்தினாலும், ‘எனக்கு இதில் விருப்பமில்லை’ என உறுதியாக மறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நாட்டு நலப்பணிகள் திட்டப் பொறுப்பாசிரியா் வைகுண்டசாமி பேசும்போது, சட்டவிரோத மது, போதைப் பொருள் விற்பனை குறித்து 10581 என்ற எண்ணுக்கோ, 94984 10581 என்ற வாட்ஸ்ஆப் எண்ணையோ தொடா்பு கொண்டு புகாரளிக்கலாம். ஈதமஎ ஊதஉஉ பச மொபைல் செயலி மூலம் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாகப் புகாரளிக்கலாம். நட்புடன் உங்களோடு மனநல சேவை 14416 எண்ணில் ஆலோசனை பெறலாம் என்றாா் அவா். மாணவா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.