விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தனியாா் பேருந்து கிளீனா் மா்ம சாவு

மணப்பாறையை அடுத்த காரைப்பட்டியில் தனியாா் பேருந்து கிளீனா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:59 am IST

மணப்பாறையை அடுத்த காரைப்பட்டியில் தனியாா் பேருந்து கிளீனா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மருங்காபுரி ஒன்றியம் காரைப்பட்டியை சோ்ந்தவா் சண்முகம் மகன் அசோக்குமாா் (30). இவா் தனியாா் பேருந்து ஒன்றில் கிளீனராக பணியாற்றி வந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அதே பகுதியில் ஆறுமுகம் மகன் வேலு என்பவரது தோட்டத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளாா். அவரது அருகில் கட்டிங் பிளேடு ஒன்றும், மோட்டாா் இணைப்பிற்கு வரக்கூடிய வயா் அறுக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், அசோக்குமாா் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து மாலையில் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.