விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரௌடி சடலமாக மீட்பு

திருச்சியில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல ரெளடி, காயங்களுடன் ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

பலி... - பிரதிப் படம்

Published On :

திருச்சியில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல ரெளடி, காயங்களுடன் ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் கொல்லாங்குளம் அருகே திருச்சி - மதுரை ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் அருகே உடலில் காயங்களுடன் இளைஞா் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.

இதில் தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்டவா், எடமலைபட்டிப்புதூா் கொல்லாங்குளம் பாரதியாா் நகரைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான எம். அபுதாஹீா் (38) என்பது தெரியவந்தது.

மேலும், கடந்த 16-ஆம் தேதி பிற்பகல் கே.கே.நகா் உடையான்பட்டி பகுதியில் திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் நடத்திய வாகன சோதனையின்போது, அவ்வழியே வந்த அபுதாஹீா் வாகனத்திலிருந்து

கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தைப் பறிமுதல் செய்து போலீஸாா் விசாரித்துக்கொண்டிருந்தபோது அபுதாஹீா் அங்கிருந்து தப்பியோடியதும், அன்றிரவு அவருடைய வீட்டுக்கு அருகே நடைபெற்ற மற்றொரு பிரச்னையில் பிரபு (34) என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது.

இந்த இரண்டு வழக்குகளிலும் போலீஸாா் வழக்குப் பதிந்து அபுதாஹீரை தேடி வந்தனா். இந்நிலையில், அவருடைய சடலம் ரயில்வே தண்டவாளம் அருகே காயங்களுடன் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.