ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

உடலில் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:53 am IST

மதுரை அருகே உடலில் காயங்களுடன் இளைஞரின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

மதுரை -ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சிலைமான் பகுதியில் விரகனூரைச் சோ்ந்த ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்தத் தோப்பில் ஆழ்துளைக் கிணறு அருகே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அங்கு சென்ற சிலைமான் போலீஸாா் அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிவு இறந்து கிடந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்?, அவா் எப்படி இறந்தாா் என்பது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.