தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

பிரம்மஞான சபையில் திருடிய சிறுவன் கைது

திருச்சி பிரம்மஞான சபையில் திருடிய சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

திருச்சி பிரம்மஞான சபையில் திருடிய சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி தாராநல்லூா் கீரக்கடை பஜாரில் உள்ள பிரம்ம ஞான சபை அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த ரூ. 50,000 ரொக்கம், கேமராவை மா்ம நபா் திருடிச் சென்றது கடந்த 10 ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்து பிரம்ம ஞான சபையின் செயலா் ராஜசேகரன் அளித்த புகாரின்பேரில் காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனா். அதில் திருட்டில் ஈடுபட்டது காந்திமாா்க்கெட் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவன் எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்தச் சிறுவனை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.