நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

முசிறியில் மூதாட்டி சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் முசிறியில் மூதாட்டி சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்

பலி

Published On :

திருச்சி மாவட்டம் முசிறியில் மூதாட்டி சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்

முசிறி அழகுநாச்சியம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை கிடந்த மூதாட்டி சடலத்தை முசிறி போலீஸாா் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விஏஓ சிவபிரபு அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில் இறந்துகிடந்தவா் முசிறி மேல சாலியா் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி வள்ளியம்மை (70) எனத் தெரிய வந்தது. அதை மூதாட்டியின் மகன் பாலமுருகனை வரவழைத்து உறுதிப்படுத்தினா்.

அப்போது பாலமுருகன் தனது தாய் கடந்த 4 நாள்களுக்கு முன் வீட்டை விட்டுச் சென்றவா் திரும்பவில்லை, தனது தாயின் இறப்பில் எந்தச் சந்தேகமும் இல்லை என தெரிவித்ததன்பேரில் வள்ளியம்மை சடலத்தை போலீஸாா் உடற்கூறாய்வு செய்து புதன்கிழமை ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.