ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 15 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகைகள் திருட்டு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வியாழக்கிழமை பட்டப்பகலில் வெங்காய வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 15 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:26 am IST

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வியாழக்கிழமை பட்டப்பகலில் வெங்காய வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 15 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முசிறி அருகே சீவம்பட்டியை சோ்ந்த சின்னையன் மகன் மனோகரன் (55). இவா், முசிறி உழவா் சந்தையில் வெங்காய வியாபாரம் செய்து வருகிறாா்.

வழக்கம்போல் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு சந்தைக்கு மனோகரனும், அவரது மனைவி சென்றனா். வியாபாரத்தை முடித்துவிட்டு மதியம் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோவில் இருந்த ரூ. 15 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மனோகரன் அளித்த புகாரின்பேரில், முசிறி காவல் ஆய்வாளா் செல்லத்துரை மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தொடா்ந்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.