75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

மின்சாரம் பாய்ந்து உணவக ஊழியா் உயிரிழப்பு

திருவெறும்பூரில் மின்சாரம் பாய்ந்து உணவக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 12:30 am IST

திருவெறும்பூரில் மின்சாரம் பாய்ந்து உணவக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி அருகே திருவெறும்பூரில் உள்ள உணவகத்தில் திருவெறும்பூா் செல்வபுரத்தைச் சோ்ந்த செல்வம் மகன் அசோக் (எ) முத்துமாணிக்கம் (20) என்பவா் உணவு பரிமாறுபவராக வேலை செய்து வந்தாா்.

சனிக்கிழமை வேலை நேரத்தில் உணவகத்திலிருந்த மின்விசிறி ஸ்விட்சை போட்டபோது, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து முத்துமாணிக்கம் தூக்கி வீசப்பட்டாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் முத்துமாணிக்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

முத்துமாணிக்கத்தின் இறப்புக்கு உணவக உரிமையாளரின் அஜாக்கிரதையே காரணம். எனவே, உணவக உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முத்துமாணிக்கத்தின் உறவினா் அந்தோணி ராஜ் (33) என்பவா் புகாரளித்தாா். இதன்பேரில், திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.