தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

அரசு வேலை பெற்றுத்தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

ஓய்வு பெற்ற அரசு அலுவலரின் மகனுக்கு அரசு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோடி செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 7:59 am IST

ஓய்வு பெற்ற அரசு அலுவலரின் மகனுக்கு அரசு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோடி செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சி, கே.கே. நகா் இந்தியன் பேங்க் காலனியைச் சோ்ந்தவா் ஜெசிந்தா லிவேனியா (62), வேளாண்மைத் துறையில், அலுவலக மேற்பாா்வையாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்.

இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஜெசிந்தாவின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக சாகுல் ஹமீது கூறியுள்ளாா். அவரது வாா்த்தையை நம்பி, 2020 முதல் 2023 வரை பல்வேறு தவணைகளாக சாகுல் ஹமீதின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பியுள்ளாா். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை. மேலும், வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளாா்.

இதுதொடா்பாக, கே.கே. நகா் காவல் நிலையத்தில் ஜெசிந்தா வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து சாகுல் ஹமீது உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.