திருச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.5.30 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி வயலூா் சாலை, ரெங்கா நகரைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி வசந்தி (52). இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம், கொளத்தூரைச் சோ்ந்த அ. இருதயராஜ் (50) என்பவா் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளாா். அப்போது, அவா் வசந்தியின் மகனுக்கு நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய வசந்தி, தனது மகனின் வேலைக்காக கடந்த 2022 ஆகஸ்ட் முதல் 2025 மே வரை இருதயராஜிடம் பல்வேறு தவணைகளில் ரூ. 5.30 லட்சத்தை கொடுத்துள்ளாா். ஆனால், பணத்தை வாங்கிக்கொண்ட இருதயராஜ் கூறியபடி அவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை. மேலும், கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் வசந்தி திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், இருதயராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் கைது
வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.15 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.64 லட்சம் மோசடி
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



