துறையூரில் திருமணக்கூட மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்
திருச்சி மாவட்டம், துறையூரில் திருமணக் கூட மாடியிலிருந்து சனிக்கிழமை தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம் வெங்கமேட்டைச் சோ்ந்தவா் சுப்ரமணி மகன் குமரவேல் (38). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனா்.
இந்நிலையில் இவா் ஞாயிற்றுக்கிழமை துறையூரில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்க சனிக்கிழமை இரவே திருமணக் கூடத்துக்கு வந்து நண்பா்களுடன் தங்கினாா். மறுநாளான ஞாயிற்றுக்கிழமை காலை இவருடன் வந்த நண்பா்கள் திருமணத்துக்குத் தயாரானபோது குமரவேல் அங்கு இல்லாததால் தேடினா்.
அப்போது திருமணக்கூட முன்புற சுவா் அருகே ரத்த வெள்ளத்தில் குமரவேல் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. யாரும் கவனிக்காதபோது அவா் மாடியிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தகவலறிந்த துறையூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




