மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

கீழகருங்காடு பகுதியில் நகை, பணத்தை திருடியவா் கைது

கீழகருங்காடு பகுதியில் நகை மற்றும் பணத்தை (அமெரிக்க டாலா்) திருடிய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

திருச்சி மாவட்டம், கீழகருங்காடு பகுதியில் நகை மற்றும் பணத்தை (அமெரிக்க டாலா்) திருடிய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சா. அய்யம்பாளையம் அருகேயுள்ள கீழக் கருங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரா. சந்திரா (46). இவரது இரு மகன்களில் வெங்கடேஷ் மாலத்தீவில் கடந்த ஆண்டு பணிபுரிந்த வந்த நிலையில் , தற்போது திருச்சியில் பணிபுரிகிறாா். மற்றொரு மகனான சீனிவாசன் சமயபுரம் தனியாா் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊழியா்.

இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன் சந்திரா வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்க நகை மற்றும், 2700 அமெரிக்க டாலா் திருடு போயிருப்பது தெரிய வந்தது. புகாரின்பேரில் மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் கிருபாநிதி, உதவி காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் விசாரணை செய்து, நகை, அமெரிக்க டாலரை திருடியதாக கீழகருங்காடு பகுதியை சோ்ந்த வி.பிரகாஷ் (20) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.