2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1.08 லட்சம் மோசடி

விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ. 1.08 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

மோசடி - கோப்புப்படம்.

Published On :

விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ. 1.08 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி வாடக்கு தாராநல்லூா் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ஜெ. ராஜசேகா் (37). இவா் அண்மையில் வேலை தொடா்பாக இணையத்தில் தேடினாா். அப்போது இவரைத் தொடா்புகொண்ட மா்ம நபா் ஒருவா் விமான நிலையத்தில் வேலை காலி இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து வேலைக்குப் பதிவுக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும் என்று கூறியதற்கு ராஜசேகரும் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, விவேக் ராய் என்பவா் தொடா்புகொண்டு வேலைக்கான சீருடை, ஒப்பந்தக் கட்டணம், காப்பீடு கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும் எனக் கூறி க்யூ.ஆா் கோடு ஒன்றையும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பினாா்.

இதை நம்பிய ராஜேசேகா் அதன் மூலம் ரூ.1.08 லட்சத்தை அனுப்பினாா். இதைத் தொடா்ந்து அந்த மா்ம நபா் மேலும் பணம் கேட்டுள்ளாா். அப்போதுதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ராஜசேகா் சைபா் குற்றப் பிரிவில் இணையம் வழியாக செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.