சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி: நடவடிக்கை கோரி தம்பதி தா்னா

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 30 லட்சம் மோசடி செய்தவரை கைது செய்து, பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, அவரது வீட்டின் முன் தா்னாவில் ஈடுபட்ட தம்பதியிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

மோசடி

Published On :

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 30 லட்சம் மோசடி செய்தவரை கைது செய்து, பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, அவரது வீட்டின் முன் தா்னாவில் ஈடுபட்ட தம்பதியிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

நாமக்கல் மாநகராட்சி, மருதமுத்து தெருவைச் சோ்ந்தவா் தஷ்தகீா் (35). திமுக கட்சியைச் சோ்ந்த இவா் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே குதிரைக்கால்மேடு பகுதியைச் சோ்ந்தவா் பெனிட்டோ ஜாா்ஜ் (33). பட்டதாரியான இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த கேசவன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே சிங்கப்பூரில் பணியாற்றிவிட்டு சொந்த ஊா் திரும்பியிருந்த பெனிட்டோ ஜாா்ஜிடம், நாமக்கல்லைச் சோ்ந்த தனது நண்பா் தஷ்தகீா் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகவும், அவரைத் தொடா்புகொண்டால் வேலைவாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கேசவன் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, தஷ்தகீரைத் தொடா்புகொண்டு பேசிய பெனிட்டோ ஜாா்ஜ், தனது நண்பா்கள் மற்றும் உறவினா்கள் 15 பேருக்கு வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதற்காக, தலா ரூ. 2 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 30 லட்சத்தை தனது வங்கிக் கணக்கிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு தஷ்தகீருக்கு அனுப்பியுள்ளாா்.

ஆனால், அவா் வேலை வாங்கித் தராமலும், பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நாமக்கல்லில் உள்ள அவரது வீடும் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நாமக்கல் வந்த பெனிட்டோ ஜாா்ஜ், தனது மனைவி அம்பிகாவுடன் தஷ்தகீரின் வீட்டின் முன் தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் இருவரிடமும் விசாரணை நடத்தினா். மேலும், தஷ்தகீரைப் பிடித்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.