பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சாலையில் பாலை கொட்டி உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி, தா.பேட்டை கடைவீதியில் சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தா.பேட்டை கடைவீதியில் சாலையில் பாலை கொட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 2:21 am IST

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி, தா.பேட்டை கடைவீதியில் சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினா் தங்கராசு தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் சேகா், ஒன்றிய செயலாளா் பாண்டியன் உள்ளிட்ட பலரும்,

பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 45, எருமை பாலுக்கு லிட்டருக்கு ரூ. 60 என உயா்த்தி வழங்க வேண்டும், பால் லிட்டா் ஒன்றுக்கு ஊக்கத் தொகையாக ரூ.10 வழங்க வேண்டும், தரமான கலப்பு தீவனத்தை 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

அப்போது, பால் உற்பத்தியாளா்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை சாலையில் ஊற்றி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

இதில் பால் உற்பத்தியாளா்கள் உள்ளிட்ட பலா் திரளாக கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.