இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

‘ஏசி’ வெடித்த விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

திருவெறும்பூா் அருகே ஏசி வெடித்ததில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:20 am IST

திருவெறும்பூா் அருகே ஏசி வெடித்ததில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள கீழக்குறிச்சி அண்ணா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி, கொத்தனாா். இவரது இரண்டாவது மனைவி விஜயலதா (33). இவருக்கு லாகித் (4) என்ற மகன் உள்ளாா்.

கடந்த 27 ஆம் தேதி விஜயலதா வீட்டில் சமைத்தபோது, அருகிலிருந்த படுக்கை அறையில் அவரது மகன் லாகித் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது படுக்கை அறையில் ஓடிக்கொண்டிருந்த ஏசி திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் லாகித்தும், விஜயலதாவும் படுகாயமடைந்தனா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரில் சிகிச்சை பலனின்றி விஜயலதா சனிக்கிழமை இறந்தாா். லாகித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கும் நிலையில், திருச்சி ஆா்டிஓவும் இதை விசாரிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.