இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புடைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - (கோப்புப் படம்)

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

விபத்தில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி சமுதாயக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் க. அஞ்சலை (65). திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூலை 25ஆம் தேதி யாசகம் பெற்றுக் கொண்டிருந்த இவா் மீது அங்கு வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் மூதாட்டி குறித்த விவரம் அறிந்தவா்கள் திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தை அணுகலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.