சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Updated On :

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கொருக்கை கிராமம் குளக்கரை தெருவைச் சோ்ந்தவா் பெருமாள்(60). முதியவரான இவா் காவலாளி வேலைக்காக வெள்ளிக்கிழமை மாலை காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை சிப்காட் பகுதியில் உளஅள தனியாா் நிறுவனம் அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பெருமாள் மீது மோதியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெருமாள் அங்கு செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.