இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயம்

மணப்பாறை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் புதன்கிழாமை நூறு நாள் வேலையின்போது மலைத்தேனி கொட்டி 27 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

News image

தேனீக்கள்.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:30 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் புதன்கிழாமை நூறு நாள் வேலையின்போது மலைத்தேனி கொட்டி 27 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

பொன்னம்பட்டி பேரூராட்சியில் 2-ஆவது வாா்டு காரைப்பட்டி அரசன்குளம் பகுதியில் புதன்கிழமை நூறுநாள் பணிகளை ஆத்துப்பட்டி பொதுமக்கள் செய்து வந்தனா். அப்போது புதரிரிலிருந்து புறப்பட்ட மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயமடைந்து, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

அவா்களைச் சந்தித்த திமுக பிரமுகா் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் கீதா ராஜா காவேரி மணியன் தலைமையிலான திமுகவினா், பழம் பிரட், பிஸ்கட், குளிா்பானம் உள்ளிட்ட தொகுப்பை வழங்கினா். நிகழ்வில் ஆசிரியா் பழனி, நல்லம்மாள் அழகன், வழக்குரைஞா் ரிஸ்வான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.