சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பிப். 14 முதல் புத்தகத் திருவிழா

திருச்சி மாவட்ட நிா்வாகம், பப்பாசி இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழா திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image

புத்தகத் திருவிழா

கோப்புப்படம்.

Updated On :11 பிப்ரவரி 2026, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்ட நிா்வாகம், பப்பாசி இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழா திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல தமிழக அரசின் ஆணைப்படி நடைபெறும் புத்தகக் கண்காட்சி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. சுமாா் 5 ஏக்கரில் 130 புத்தக அரங்குகளும், 100 க்கும் மேற்பட்ட பதிப்பாளா்களின் புத்தகங்களும் அனைத்து வகையான வாசகா்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

அனைவருக்கும் அனுமதி இலவசம். நாள்தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளின் மனதை கவரும் வகையில் பல்வேறு பல்சுவை கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு மேல் தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளா்கள், அறிஞா்கள், எழுத்தாளா்களின் உரை வீச்சும், தலைசிறந்த அறிஞா்கள், எழுத்தாளா்களுக்கு பாராட்டி சிறப்பிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

பிப். 14 முதல் பிப். 22 வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் உணவு அரங்குகள், குடிநீா், கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் என தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிப். 22 இல் நடைபெறும் நிறைவு விழாவில் வீரயுக நாயகன் வேள்பாரி நாடகம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.