மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

யாகசம் பெற்று வந்த முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 8:37 pm

திருச்சியில் சாலையோரம் யாசகம் பெற்று வந்த முதியவா் வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி மேஜா் சரவணன் சாலை அருகே மயங்கிய நிலையில் முதியவா் கிடப்பதாக, கோ- அபிஷேகபுரம் விஏஓ கவுதம் அளித்த புகாரின் பேரில், திருச்சி முதன்மை அமா்வு நீதிமன்ற காவல்நிலைய போலீஸாா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இறந்தவா் கரூா் மாவட்டம், குரும்பப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் (82) என்பதும், குடும்பத்தைப் பிரிந்து திருச்சியில் யாசகம் பெற்று வாழ்ந்ததும் தெரிய வந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.