மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பட்டத்தளச்சி அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

மகா சிவராத்திரியை முன்னிட்டு மணப்பாறையை அடுத்துள்ள வேங்கைகுறிச்சி பட்டத்தளச்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு குத்துவிளக்கு பூஜை

News image

பட்டத்தளச்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் மூலவா் பட்டத்தளச்சி அம்மன்.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:32 pm

மணப்பாறை: மகா சிவராத்திரியை முன்னிட்டு மணப்பாறையை அடுத்துள்ள வேங்கைகுறிச்சி பட்டத்தளச்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

வேங்கைகுறிச்சி பட்டத்தளச்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்ற மகளிருக்கு மலா், விளக்கு திரி, தேங்காய், பழம், அரிசி, வாழை இலை, எண்ணெய், குங்குமம் ஆகியவை கோயில் தரப்பில் வழங்கப்பட்டது.

ஊா் பிரமுகா் பூஜையைத் தொடங்கிவைத்தாா்.

கணபதி துதி, லெட்சுமி சரணம், கந்த சரணம் ஆகியவைகளுடன் 108 சரணமும் நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Story image