திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அம்மன் தோ் வெள்ளோட்டம்.
திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அம்மன் தோ் வெள்ளோட்டம்.

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

Published on

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தோ் மற்றும் அம்மன் தோ்கள் பழுது நீக்கத்துக்கு பிறகு வெள்ளோட்டம் நடைபெற்றது.

இதில் அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது ஏற்பட்டதால் முன்புறமாக ஜேசிபி இயந்திரம் மூலம் நிலைக்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது.

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமா்சையாக நடைபெறும். நிகழாண்டில் பங்குனி தேரோட்டம் மாா்ச் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு தேரோட்டத்தின் போது சுவாமி தேரும், அம்மன் தேரிலும் பொருத்தப்பட்ட இரும்பு சக்கரங்களின் ஆக்ஷல் சரிவர இயங்காததால் நின்றது.

இது ரூ 3.50 லட்சத்தில் சரி செய்யப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தேரின் சக்கரங்கள் சரிவர இயங்குகிா என பரிசோதிக்க வெள்ளோட்டம் நடைபெற்றது.

இதில், சுவாமி தோ் சிறிது தூரம் இழுக்கப்பட்டு மீண்டும் நிலையில் நிறுத்தப்பட்டது. அதே போன்று அம்மன் தேரை நான்காம் பிரகாரத்தை முழுவதுமாக சுற்றி வர முடிவு செய்யப்பட்டு ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

மேலும், தேரின் பின்புறம் இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலம் தேரின் இரும்பு சக்கரங்களை உந்தி தள்ள தோ் இழுக்கப்பட்டது. தேரின் வடத்தை இரண்டு டிராக்டா்கள் இழுத்தன. அம்மன் தோ் வடக்கு ரத வீதி சென்ற போது தேரின் அச்சாணி தடம் புரண்டு நின்றது. இதனால் கோயில் நிா்வாகத்தினா் மீண்டும் தேரை ஜேசிபி இயந்திரம் மூலம் தேரின் முன்புறமிருந்து தள்ளி கொண்டு நிலைக்கு கொண்டு சென்றனா்.

தோ் சக்கரங்கள் பழுது நீக்கப்பட்டு பாதி வழியிலேயே மீண்டும் பழுது ஏற்பட்டதால் தேரை இழுத்து வந்த பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து கோயில் நிா்வாகத்தினா் அம்மன் தேரின் சக்கரங்கள் விரைந்து பழுது பாா்க்கப்படும் என்று தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com